அகதிகள் விடயம் – அவுஸ்ரேலியா மீது குற்றச்சாட்டு

283 0

refugees500vnsஅவுஸ்திரேலியாவிற்கு வரும் அகதிகள் குறித்து அந்த நாட்டு அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் சட்ட விரோதமானது என ஐக்கிய நாடுகளுக்கான அகதிகள் உயர் ஸ்தானிகராலயம் குற்றஞ்சாட்டிவருகின்றது.

தற்போது இந்த கொள்கையில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, உலகின் பல நாடுகளில் இருந்து வருகைதரும் அரசியல் அகதிகளை அமெரிக்காவில் மீள குடியேற்றுவதற்கு ஏற்றவகையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இது குறித்த விபரம் அவுஸ்திரேலிய அரசாஙகத்தால் கடந்த வாரம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நவூறு மற்றும் பப்புவா நியுக்கினியாவில் உள்ள மானுஷ் தீவு இடைத்தங்கல் முகாம்களை மூட அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது.

இந்த விடயம் குறித்து ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உதவி உயர்ஸ்தானிகர் வொல்க டர்க் கருத்து தெரிவிக்கையில், உண்மையான அகதிகளை இனங்காண தமது அமைப்பு உதவும் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அவுஸ்திரேலியாவிற்கு இலங்கை உட்பட்ட ஆப்கானிஸ்தான் மலேசியா, வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்தே அகதிகள் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.