இந்திய வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை பயன்படுத்தி இலங்கை பெண்களை வெளிநாடு அனுப்பும் வர்த்தகம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதனை தெரிவித்துள்ளது.
அந்த கடவுச்சீட்டுக்கள் மூலம் வீசா பெற்று கொண்டு டுபாய் செல்ல முற்பட்ட 6 பெண்கள் கைது செய்யப்பட்டதுடன் குறித்த வர்த்தகம் தொடர்பான தகவல்கள் தெரியவந்துள்ளன.
கைதானவர்கள் நுவரெலியா, மூதூர், செங்கலடி, இப்பாகமுவ மற்றும் தங்கொட்டுவ ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்ற விசாரணை திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.