மட்டக்களப்பு மாவட்டத்தில் பகல் 12 மணிவரையில் 40 வீதமான வாக்கு பதிவு இடம் பெற்றுள்ளதாகவும் 345 வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன் சுமூகமான வாக்களிப்பு இடம்பெற்றுவருவதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமான கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.
தேர்தல் வாக்கெடுப்பு மத்திய நிலையமான இந்துக் கல்லூரியில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மாவட்டத்திலுள்ள கல்குடா, மட்டக்களப்பு, பட்டிருப்பு ஆகிய மூன்று தேர்தல் தொகுதியில் 428 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பித்த வாக்களிப்பு பகல் 12 மணிவரையும் கல்குடா தேர்தல் தொகுதியில் 38 வீதமும், மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 36 வீதமும். பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் 34 வீதமுமாக மாவட்டத்தில் 40 வீதமான வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது.
இதுவரை பாரிய வன்முறைகள் எதுவும் இடம்பெறவில்லை அதேவேளை 345 வன்முறைச்சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் வாக்களிப்பு நிலையங்களில் மக்கள் நீண்டவரிசையில் நின்று சுகாதார வழிமுறைகளை பின்பற்றி வாக்களிப்பதில் ஆர்வங்காட்டிவருகின்றனர் என அவர் தெரிவித்தார்.