காலி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள எவன்காட் கப்பலை 35 மில்லியன் ரூபா பிணை முறியின் கீழ் விடுவிக்குமாறு காலி முதன்மை நீதவான் நிலுபுலீ லங்காபுர உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கு இடம்பெற்ற போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக துப்பாக்கிகள் மற்றும் வெடிப் பொருட்கள் கடத்தப்பட்டதாக குற்றம் சுமத்தி குறித்த கப்பல் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி கடற்படையினரால் கையேற்கப்பட்டது.
குறித்த கப்பல் தொடர்பான வழக்கு கடந்த 9ஆம் திகதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, கப்பலை விடுவிக்க ஆட்சேபனை இல்லை என்று அரசாங்க தரப்பு சட்டத்தரணி தெரிவித்தார்.
எனினும், 2 லட்சம் அமெரிக்க டொலர்கள் பிணை முறியுடனயே அதனை விடுவிக்க வேண்டும் என்றும் அவர் நிபந்தனை முன்வைத்தார்.
எனினும் குறித்த கப்பல் ஒரு வருடமாக நங்கூரமிடப்பட்டுள்ளதால், அதனை பராமறிப்பதற்கு பாரிய அளவிலான நிதி செலவாகி இருப்பதாகவும், பிணை முறி மூலம் அதனை மீண்டும் பெற்று கொள்வதில் பயன் இல்லை என அவன்காட் நிறுவனத்தின் சட்டத்தரணிகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடதக்கது.