கடற்படை மற்றும் பாதுகாப்பு அமைச்சி இணைந்து ஏற்பாடு செய்துள்ள சர்வதேச கடல் மாநாடு இலங்கையில் நடைப்பெறவுள்ளது.
இந்த மாநாடு எதிர்வரும் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைப்பெறவுள்ளது.
‘காலி தொடர்பாடல் 2016’ என்ற நாமகரத்தில் இந்த மாநாடு நடைப்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த கடற்படை மற்றும் நீரியல் தொடர்பான நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் கலந்து கொள்கின்றனர்.
40 நாடுகள் மற்றும் 12 சர்வதேச அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் தமது அனுபவங்களை இந்த மாநாட்டின் போது பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.