தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை என்ன ?

298 0

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் இன்று நடைபெறும் 2020 பாராளுமன்ற பொதுத் தேர்தல் வாக்களிப்பில் வழமை போன்று தமது ஜனநாயக உரிமை யைப் பயன்படுத்து மாறும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

வாக்களிப்பு இன்று காலை 7.00 மணி தொடக்கம் காலை 5.00 மணிவரை நடைபெறவுள்ளது. சுகாதார பாதுகாப்பு தொடர்பில் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. இது தொடர்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு தொடர்பில் தேவைப்படும் பட்சத்தில் மேலதிக பொலிஸாரையும் அழைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வாக்களித்ததன் பின்னர் மக்கள் ஆங்காங்கே ஒன்று கூடி இருப்பதைத் தவிர்த்து வீடுகளுக்கு அல்லது வேலைத் தளங்களுக்குச் செல்லுமாறும் அவர் இதன்போது கேட்டுக்கொண்டுள்ளார்.

அதேவேளைத் தேர்தல் சட்டங்களை மீறும் சம்பவங்களை உடனடியாக வீடியோ மூலம் பார்வையிடுவதற்கும் பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

அதற்கிணங்க சகல பொலிஸ் பிரிவுகளுக்கும் கெமராக்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.