வெளிநாடு செல்வதற்காக, பெசில் ராஜபக்ஷசவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை மனு குறித்த விசாரணை எதிர்வரும் 7ஆம் திகதிவரை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இது குறித்த விசாரணை ஆரம்பமானபோதே வழக்கு பிற்போடப்பட்டுள்ளது.
பெசில் ராஜபக்ஷவின் உடல்நலம் குறித்த சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.
இதனையடுத்தே மனுவின் மீதான விசாரணை மீண்டும் 7ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பெசில் ராஜபக்ஷ இருதய நோய்நிலைக்கு சிகிச்சை பெற்றுக்கொள்ள அமெரிக்கா செல்ல மூன்று மாத காலம் அவகாசம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.