இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு தற்போது ஆரம்பமாகியுள்ளது.
இன்று (05) காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 5 மணி வரையில் இடம்பெறும்
இந்த வகையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் திருமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் எழிலன் அவர்களின் துணைவியாரும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற வேட்பாளருமான அனந்தி சசிதரன் அவர்கள் வாக்களித்தார் .