தேர்தல் சட்ட மீறல் குறித்து ருவான் குணசேகர் தெரிவித்தது என்ன?

254 0

தேர்தல் சட்ட மீறல் தொடர்பான சம்பவங்களை வீடியோ எடுத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க பொலிஸார் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அனைத்து பொலிஸ் பிரிவுகளுக்கும் அதற்கேற்ப கெமராக்கள் வழங்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் அத்தியட்சருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்

ஏதேனும் சட்டவிரோத நடவடிக்கை இடம்பெற்றால் இது தொடர்பாக நீதிமன்றத்தின் ஆஜராகும் போது வீடியோவை ஆதாரமாகப் பயன்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வாக்குப்பதிவு செய்ய பயன்படுத்தப்படும் 12ஆயிர த்து 984 வாக்குச்சாவடிகளைப் பாதுகாக்க தலா இரண்டு பேர் அடிப்படையில் 25ஆயிரம் 998 இரண்டு அதிகாரிகள் பணியில் அமர்த்தப் பட்டுள்ளனர்.

அத்துடன் வாக்கு எண்ணும் 64 மத்திய நிலையங்களுக்குப் பாதுகாப்பிற்காக 3ஆயிரத்து 328 பொலிஸ் அதிகாரிகளை நிறுத்தி வைத்துள்ளனர், மேலும் ஒவ்வொரு வாக்குகளை யும் எண்ணும் மத்திய நிலையங்களுக்கு 52 அதிகாரிகள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு வாக்கு எண்ணும் மத்திய நிலையத்தின் வெளி யேறும் பகுதியில் பாதுகாப்பதற்காக 45 பேர் என்ற அடிப்படையில் தெரிவு செய்து பாதுகாப்புப் பணிகளுக் காக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், நாடு முழுவதும் 121 பொலிஸ் சோதனை சாவடிகளை அமைக்கப்பட்டுள்ளதா கவும் பொலிஸார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித் துள்ளார்.