விசேட தேவை உடையோரின் உரிமைகளையும், வரப்பிரசாதங்களையும் பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படவிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
இந்த விடயத்தில் நிலவும் குறைபாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவற்றை நிவர்த்தி செய்து, விசேட தேவை உடையோருக்கான சேவைகள் பூரணமாக வழங்கப்படும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.