கேரளாவைச் சேர்ந்து மூன்று ஐ.எஸ். ஆதரவாளர்களை இலங்கைக்கு அனுப்புவதற்கு நிதி வழங்கியதாக கூறப்படும் மூன்று பேரை கைது செய்ய இந்திய தேசிய புலனாய்வு பிரிவு மும்பை நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளது.
குறித்த மூன்று பேரும் இஸ்லாமிய மதப் போதகரான சாகிர் நாயக்கின் இஸ்லாமிய ஆராச்சி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்துல் மஜிட் அப்துல் காதர் என்பவரது மகனும், மருமகளும் அவர்களின் பிள்ளையும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் இலங்கைக்கு வந்ததாக கூறப்படுகிறது.
அவர்களுக்கான நிதியை சாகிர் நாயக்கின் ஸ்லாமிய ஆராய்சி நிறுவனமே வழங்கியதாக அப்துல் மஜிட்டினால் நாக்படா காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்அடிப்படையிலேயே அவர்களை கைது செய்ய அனுமதி கோரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.