ஸ்ரீலங்காவில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியை இராஜினாமா செய்வதாக கலாநிதி தீபிகா உடகம அறிவித்துள்ளார்.
இந்நிலையில், கலாநிதி தீபிகா உடகம, ஜனாதிபதிக்கு தனது இராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளதுடன், அதன் பிரதியை அரசியலமைப்பு பேரவைக்கு அனுப்பியுள்ளார்.
இதனையடுத்து, நேற்று (திங்கட்கிழமை) அரசியலமைப்புப் பேரவை கூடியபோது கலாநிதி தீபிகா உடகமவின் இராஜினாமா கடிதம் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற ருவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அரசியலமைப்பு பேரவை கூடியபோது, மனித உரிமை ஆணைக்குழுவில் அவர் ஆற்றிய சேவை தொடர்பில் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.
மஹிந்த ராஜபக்ஸ, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த சமரசிங்க, பிமல் ரத்நாயக்க உள்ளிட்ட சிலர் இதில் கலந்துகொண்டிருந்தனர் என்பத குறிப்பிடத்தக்கது.