ஸ்ரீலங்காவின் ஏற்றுமதி வருவாயில் அதிகரிப்பு

280 0

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் ஸ்ரீலங்காவின் ஏற்றுமதியில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் பிரபாஸ் சுபசிங்க தெரிவித்துள்ளார்.

புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கான ஸ்ரீலங்காவின் ஏற்றுமதி வருவாய் 1,060 மில்லியன் டொலராக பதிவாகியுள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தின் ஏற்றுமதி வருவாய் 999 மில்லியன் டொலர் ஆகும். ஏப்ரல் மாதத்தில், ஏற்றுமதி வருவாய் 310 மில்லியன் டொலர் ஆகும்.

அந்தவகையில் இந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான ஏற்றுமதி வருவாய் முறையே 587 மில்லியன் டொலர் மற்றும் 1,020 மில்லியன் டொலர்கள் ஆகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையின் பின்னணியில், கடும் வீழ்ச்சியை சந்தித்த ஸ்ரீலங்காவின் ஏற்றுமதி வருவாய் ஏப்ரல் மாதத்தில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.