நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் அநுத்த சம்பாயோ நேற்று (02) குருணாகலையில் வைத்து கைது செய்யப்பட்டார்.
அரச புலனாய்வு பிரிவு மற்றும் பொலிஸ் புலனாய்வு அதிகார்கள் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போதே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு சிறைச்சாலை கைதிகளுக்கு விசேட சலுகைகளை வழங்கியமை மற்றும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முன்னாள் நீர்க்கொழும்பு சிறைச்சாலை அத்தியட்சகர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.
குருணாகலையில் கைதான சம்பாயோ நேற்று குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.
அவர் இன்று (03) நீர்கொழுப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
முன்னாள் நீர்கொழும்பு சிறைச்சாலை அத்தியட்சகர் அநுத்த சம்பாயோ நேற்று குருணாகல் புனித அன்னம்மாள் பாடசாலைக்கு அருகில் வைத்து பிற்பகல் 3.35 அளவில் கைது செய்யப்பட்டார்.
அதன் பின்னர் அவர் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டதுடன், மாலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.