ஸ்ரீலங்காவில் வறுமையை ஒழிப்பதற்கு ஆரம்பித்த பயணத்தை எத்தகைய தடைகள் வந்தாலும் நிறுத்தமாட்டேன் என கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்காவை அபிவிருத்தி பாதையை நோக்கி கொண்டுச்செல்லும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “ சுபீட்சத்தினை நோக்கி கொள்கை பிரகடனத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.
மேலும், பெரும்பாலானோருக்கு தொழில் கிடைத்தாலும் ஏழை மக்களுக்கு சந்தர்ப்பம் கிடைப்பது மிகவும் குறைவாகவே இருக்கின்றது. எனவே அவர்களின் வாழ்க்கையை முன்னேற்றமடைய செய்ய சிறந்த வேலைத்திட்டங்களை முன்னெடுப்பேன்.
நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் சிந்திக்கும் தலைவர் அதிகாரத்திற்கு வரும்போது, அவரினால் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை குழப்புவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர்.
எனினும், எந்த தடைகள் வந்தாலும், அவைகளை முறியடித்து வறுமையை நிச்சயம் ஒழிப்பேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.