தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளராக வேலாயுதம் சிவஞானசோதி நியமனம்

398 0

sinagnanasothyதேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளராக வேலாயுதம் சிவஞானசோதி நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 9ஆம் திகதி முதல் அமுலுக்குவரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத விவகார அமைச்சு, தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு மற்றும் பாரம்பரிய கைத்தொழில், சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றில் 2010ஆம் ஆண்டு முதல் செயலாளராக வேலாயுதம் சிவஞானசோதி கடமையாற்றியுள்ளார்.

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நேரடி கண்காணிப்பில் கீழ் வருவதுடன், அந்த அமைச்சின் அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.