தேர்தல்வன்முறைகள் குறித்த அதிகளவு முறைப்பாடுகள் கிடைத்துள்ள மாவட்டமாக குருநாகல் காணப்படுகின்றது என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் முதலாம் திகதி வரையிலான தேர்தல் வன்முறைகள் குறித்த முறைப்பாடுகள் பற்றிய விபரங்களை தேர்தல் வன்முறைகளை கண்காணி;ப்பதற்கான நிலையம் வெளியிட்டுள்ளது.
குருநாகலில் இருந்து அதிகளவாக 85 முறைப்பாடுகளும் பதுளையிலிருந்து 72 முறைப்பாடுகளும் அனுராதபுரத்திலிருந்து 67 முறைப்பாடுகளும்இரத்தினபுரி மற்றும் காலியிலிருந்து 60க்கும் மேற்பட்ட முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.
வன்னியிலிருந்து 58 முறைப்பாடுகளும்,கொழும்பிலிருந்து 53 முறைப்பாடுகளும்,யாழ்ப்பாணத்திலிருந்து 40 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன இதுவரை 1006 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவிற்கு எதிராகவே தொடர்ந்தும் அதிகளவான முறைப்பாடுகள் கிடைத்துவருகின்றன எனவும் தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.