கிளி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுமக்கள் சிரமதானம்(காணொளி)

484 0

kilinochchiகிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் பொது மக்களால் இன்று காலை சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டுள்ளது.

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்ல சிரமதானப் பணியில் 150இற்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.

குறித்த துயிலும் இல்லத்தில் 2150 உடல்களும் 1000 வரையான நினைவுக்கற்களும் உள்ளடங்கலாக 3ஆயிரத்து 150 பேருக்கு அஞ்சலி செலுத்தும் நினைவிடமாக இருந்தது.

கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட 183 ஏக்கர் காணிகளில் குறித்த துயிலமில்லக் காணிகளும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.