மத்திய வங்கி ஆளுநரின் மருமகன் அர்ஜுன் கனவை சிதறடித்த மைத்திரி!

335 0

maithri-1சர்ச்சைக்குரிய மத்திய வங்கி முறி மோசடியுடன் தொடர்புடைய முன்னாள் மத்திய வங்கி ஆளுநரின் மருமகன் அர்ஜுன் எலோசியஸ் சிங்கள தொலைக்காட்சி சேவை ஒன்றை கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளார்.

எனினும் அந்த நடவடிக்கை அரசியல் ரீதியாக தடை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

முறி சம்பவம் தொடர்பிலான விசாரணைகள்ந நிறைவடையும் வரையில் அவ்வாறான நடவடிக்கைக்கு இடமளிக்க முடியாதென ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலத்திரனியல் ஊடகங்களின் பணிப்பாளர் சபை மாற்றம், பங்கு விற்பனை செய்வதற்கு, ஊடக அமைச்சின் அனுமதி மற்றும், அவ்வாறான நடவடிக்கைகளின் போது வானொலி மற்றும் தொலைக்காட்சி இலத்திரனியல் பாரம்பரியம் தொடர்பில் ஜனாதிபதியின் கீழ் உள்ள தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் அனுமதி பெற வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் போது சிங்கள தொலைக்காட்சி சேவை ஒன்றினை அரசாங்கத்திற்கு எதிரானவர்களினால் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக வெளியாகியதனை தொடர்ந்து, அந்த நடவடிக்கையினை தடுப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் அவரது ஆட்சியின் இறுதி காலப்பகுதியில் இவ்வாறான சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

எப்படியிருப்பினும் பாரியளவு பணம் செலவிட்டு குறித்த தொலைக்காட்சி சேவை ஊடாக பாரிய ஊடக வர்த்தகம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ள அர்ஜுன் எலோசியஸ், எதிர்வரும் வருடத்தின் ஆரம்பத்தில் தேசிய பத்திரிகைகள் சிலவற்றையும் வெளியிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.