கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரண மாக தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களையும் பயன்படுத்தி வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
சாரதி அனுமதி பத்திரங்கள் காலாவதியாகியிருப்பினும் தற்போதைய கொரோனா நிலைமையைக் கருத்திற் கொண்டு அவற்றைப் பெற்றுக்கொள்ள மோட்டார் வாகன திணைக்களம் சலுகை காலத்தை மார்ச் முதல் ஜூன் வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள ஆறு மாதங்களும், ஜூன் முதல் செப்டெம்பர் வரை காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களைப் பெற 3 மாதங்களும் மேலதி கமாக வழங்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், இந்த சலுகை காலத்தைத் தாண்டாத சாரதி அனுமதிப்பத்திரங்கள் பொதுத் தேர்தலில் வாக் களிப்பதற்கான அடையாள அட்டையாகக் கருதப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிக்கப் பிரத்தியேக பேன்களைப் பயன்படுத்த முடியும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அவை நீலம் அல்லது கருப்பு பேனையாக இருக்க வேண் டும் எனவும், அதில் எந்தவொரு கட்சி வேட்பாளரையும் ஊக்குவிக்கும் எந்த அடையாளமும், நிறமும், சின்னமும் இருக்கக்கூடாது எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வாக்காளர் ஒருவர் தனக்கான சொந்த பேனாவைக் கொண்டு வர முடியாவிட்டால், அத்தகைய வாக்காளர் களுக்கு வாக்களிப்பதற்காக கிருமிதொற்று நீக்கம் செய்யப்பட்ட பேனைகள் வழங்கப்படும் எனவும் ஆணைக்குழு மேலும் தெரிவித்தது.