வவுனியா மதவாச்சி பகுதியில் வெடி பொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன.
வவுனியா மதவாச்சியில் 2 ஆயிரத்து 634 ஜெலட்நைட் குச்சிகள், ஆயிரத்து 922 டெட்டநேட்டர்கள் மற்றும் வெடி மருந்து என்பவற்றுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதவாச்சி – இசின்பெஸ்கல பகுதியில் கற்குழியில் இருந்து வெடிப்பொருட்கள் உள்ளிட்ட ஆபத்தான உபகரணங்களுடன் சந்தேகநபர்களை கடற்படையினர் கைது செய்யப்பட்டனர்.
குறித்த நபர்களிடம் இருந்து ஜெலட்நைட் குச்சிகள், டெட்டநேட்டர்கள் மற்றும் வெடி மருந்து என்பன கடற்படை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.