யாழ்ப்பாணம் குருநகர்ப் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்களைக் காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 23ஆம் திகதி மதியம் படகொன்றில் நெடுந்தீவுக் கடற்பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற இருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
குருநகர் மத்திய கிழக்கு வீதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஜோன் அன்ரனி மற்றும் 38 வயதுடைய யூட் மைக் ஆகிய இரவருமே காணாமல் போயுள்ளனர்.
இது தொடர்பாக கடற்படை மற்றும் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக நண்பர் ஒருவர் தெரிவித்தார்.