அவிசாவளை நூரி தோட்ட அதிகாரி கொலை-18 பேருக்கு மரணதண்டனை(காணொளி)

400 0

avisawella-death-penaltyஅவிசாவளை – தெரணியாகலை நூரி தோட்ட அதிகாரியை கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட 18 பேருக்கு இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவிசாவளை மேல் நீதிமன்ற நீதிபதி தேவி அபேரத்னவினால் இந்த தீர்ப்பு சற்று முன்னர் வழங்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

2013ஆம் அண்டு ஜுலை மாதம் 5ஆம் திகதி அவிசாவளை – தெரணியாகலை நூரி தோட்ட அதிகாரி நிஹால் பெரேராவை வெட்டி கொலை செய்த சம்பவம் தொடர்பில் 21 சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்கு விசாரணைகள் அவிசாவளை மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்ததது.

இந்த வழக்கு விசாரணையில் 18 பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டதாகவும், மூன்று பேரை விடுவித்து விடுதலை செய்வதாகவும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.