தனியார் பேரூந்து பணிபகிஷ்கரிப்பு உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து பணி பகிஷ்கரிப்பு காரணமாக, இம்முறை கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பாதிக்கப்படலாம் என்று இலங்கை அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சில தொழிற்சங்கங்களால் ஆரம்பிக்கப்பட இருக்கின்ற தனியார் பேரூந்து பணிபகிஷ்கரிப்பு உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து பணி பகிஷ்கரிப்பு காரணமாக, இம்முறை கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு தாக்கத்தை ஏற்படலாம் என்று இலங்கை அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
2016 ஆம் ஆண்டு கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் மாதம் 06ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு ஏற்படவுள்ள அசௌகரியங்கள், மற்றும் தாக்கம் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு இலங்கை அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் பியசிறி பெர்ணாந்டோ கேட்டுக்கொண்டுள்ளார்
போக்குவரத்து விதி மீறலுக்காக அதிகரிக்கப்பட்டுள்ள தண்டத் தொகைக்கு எதிராக நாடு பூராகவும் தனியார் பேரூந்துகள், முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து சேவைகள் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன.
பாரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் போன்றே பெரும்பாலான பரீட்சை நிலைய அதிகாரிகளும் பொதுப் போக்குவரத்து சேவையையே பயன்படுத்துவதால் இது பெரும் பிரச்சினையாக அமையும் என்று பியசிறி பெர்ணாந்தோ குறிப்பிட்டுள்ளார்.
சில பிரதேசங்களில் தனியார் பேரூந்துகள் மாத்திரமே போக்குவரத்தில் ஈடுபடுவதால் அப்பிரதேச மாணவர்களுக்கு இது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.