மீகொட- நாவலமுல்ல, மயான வீதியிலிலுள்ள விவசாய பண்ணையொன்றிலிருந்து மீட்கப்பட்ட, கழுகை தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு ஒப்படைத்து, அது தொடர்பான மேலதிக அறிக்கையை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு, ஹோமாகம நீதவான் நிலபுலி லங்காபுர உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் கழுகுடன் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் தலா ஓர் இலட்ச ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த பறவையை வளர்ப்பது குற்றமென, நீதிமன்றத்தில் அறிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தலும் நாட்டின் சட்டத்துக்கு அமைய, குறித்த கழுகு இனத்தை வளர்ப்பது குற்றமில்லை என்று, பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சுதத் விக்ரமரத்ன இதன்போது மன்றில் தெரிவித்துள்ளார்.