யாழ்.போதனா வைத்தியசாலை 7ம் இலக்க விடுதியில் இருந்த 70 பேர் தனிமைப்படுத்தல்

333 0

யாழ்.போதனா வைத்தியசாலை 7ம் இலக்க விடுதியில் சிகிச்சை பெற்ற ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த விடுதியில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் அனைவரும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த நோயாளி 7ம் இலக்க விடுதியின் மலசல கூடத்தைப் பயத்தியமை மற்றும் சிற்றுண்டிச் சாலைக்குச் சென்றமை ஆகிய காரணங்களினால் வடக்கு மாகாண சுகாதார குழுவின் தீர்மானத்தின் அடிப்படையில் மேற்படி முடிவு எடுக்கப்பட்டது.

இதனடிப்படையில் வடக்கு மாகாணம் மற்றும் வெளி மாகாணங்களைச் சேர்ந்த 70 பேர் அவர்களது வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கை நேற்று (30) மாலை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் வடக்கு மாகாணம், பொலனறுவை மற்றும் குருநாகல் மாவட்டங்களை சேர்ந்த 70 பேர் இவ்வாறு அவர்களது வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.