சிறிலங்காவில் அம்பலங்கொட புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கு பயணித்த புகையிரதத்திலேயே குறித்த நபர் மோதியுள்ளார்.
ஊரவத்த பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் அம்பலங்கொட பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.