சிறிலங்காவில் அனைத்து மின்சார பாவனையாளர்களுக்கும் 3 பில்லியன் ரூபாய் சலுகை!

298 0

சிறிலங்கா ரீதியில் அனைத்து மின்சார பாவனையாளர்களுக்கும் 3 பில்லியன் ரூபாய் சலுகை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நுகர்வுக்கு உட்படுத்திய மின்சார பாவனைக்கே இவ்வாறு சலுகை வழங்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

67 இலட்சம் மின் பாவனையாளர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பெப்ரவரி மாதம் வழங்கப்பட்டுள்ள கட்டண பட்டியலுக்கு அமைய அடுத்த மூன்று மாதங்களுக்கு செலுத்த முடியுமெனவும் இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.