சிறிலங்காவில் ஆயுர்வேத சிகிச்சை மையங்களை திறவுங்கள் – ஸ்பா ஊழியர்கள் கோரிக்கை

252 0

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தொடர்ந்தும் பலரின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன, இதன் விளைவாக அவர்கள் கடுமையான நிதி நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திலும் உள்ளனர்.

இலங்கையில் தற்போது சுமார் 200,000 பெண்கள் நாடு முழுவதும் அமைந்துள்ள சுமார் 40,000 ‘ஸ்பா’அல்லது ஆயுர்வேத சிகிச்சை மையங்களில் பணிபுரிகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக ஸ்பாக்களை தற்காலிகமாக மூடுவதற்கான அரசாங்கத்தின் முடிவைத் தொடர்ந்து, வேலையை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டதாக இந்த நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் முறைப்பாடுகளை வழங்கியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

எனவே குறித்த நிலையங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதை மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்தையும் சுகாதார அதிகாரிகளையும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.