கொழும்பின் பல பகுதிகளுக்கு 10 மணி நேரம் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

288 0
அத்தியாவசிய திருத்த வேலைகள் காரணமாக கொழும்பின் பல பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி இன்று (30) பிற்பகல் 2 மணி முதல் சுமார் 10 மணி நேரம் குறித்த பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 01, 02, 03, 07, 08, 09, 10, 12, 13 மற்றும் 14 ஆகிய பகுதிகளுக்கே குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் எனவும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.