வைத்தியரைப் போன்று நடித்து நகைகள் கொள்ளை

306 0

டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்ற பெண்களிடம் பெருமளவான நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

கிளங்கன் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்ற பெண்கள் இருவரிடம், இரண்டு இட்சத்திற்கும் அதிக பெறுமதியான நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த கொள்ளைச் சம்பவம் நேற்று மாலை (29.07.2020) இடம்பெற்றுள்ளது

வைத்தியரைப் போன்று நடித்து குறித்த சந்தேக நபர், சிகிச்சைக்காக வந்திருந்த பெண்களை பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், நகைகளைக் கழற்றி கைப்பையில் வைத்துவிட்டுவருமாறும் கூறியுள்ளார்.

அதன்பின்னர் பெண்கள் இருவரையும் அழைத்துச்சென்ற சந்தேக நபர், கைப்பைகளுடன் திடீரென மாயமாகியுள்ளார். இந்நிலையில், பதற்றமடைந்த பெண்கள் உடனடியாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து, கொள்ளை சம்பவம் தொடர்பில் நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.