பிரதேச செயலக ஊழியர்கள் இருவர் போதைப் பொருளுடன் கைது

336 0

களனி மற்றும் கொலன்னாவ பிரதேச செயலக அலுவலக ஊழியர்கள் இருவர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரிடம் இருந்து 250 கிராம் ஐஸ் போதைப் பொருள் கைது கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேலியகொட, பட்டிவில சந்தியில் வைத்து குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.