வங்கிக்கொள்ளையர்களுடன் உதவியுடன் அரசாங்கம் என்மீது போலிச்குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றது

250 0

நான் அமைச்சராகயிருந்தவேளை இடம்பெற்ற ஊழல்கள் குறித்து எந்த விசாரணைகளையும் எதிர்கொள்ள தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பொரளையில் தேர்தல் பிரச்சாரகூட்டமொன்றில் உரையாற்றுகையில் வங்கிகொள்ளையர்களின் உதவியுடன் அரசாங்கம் என்மீது சேற்றை வாரியிறைக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கலாச்சார நிதியம் முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் சஜித்பிரேமதாசவின் கீழ் காணப்பட்டவேளை முறைகேடுகள் இடம்பெற்றதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளமை குறித்தே சஜித்பிரேமதாச இதனை தெரிவித்துள்ளார்.

நான் எந்த நிதியத்தையும் தவறாக பயன்படுத்தவில்லை இது குறித்த விசாரணைகளை ஆரம்பிக்க நான் தயார் என சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார்.