புத்தளம் மாவட்டத்தில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் மன்னார் மாவட்டத்திலும் வாக்களிப்பு

304 0

கடந்த காலங்களில் அரசியல் வாதிகளின் செயற்பாடுகளினால் புத்தளம் மாவட்டத்தில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் மன்னார் மாவட்டத்திலும் வாக்களித்து வருவதாக தொடர்ச்சியாக சந்தேகம் நிலவி வருகின்றது.

இந்த நிலையில் கடந்த வருடம் மன்னார் மாவட்டத்தில் வசிக்காது புத்தளம் மாவட்டத்தில் வசித்து வரும் வாக்காளருக்குரிய பதிவுகளை மன்னார் மாவட்ட தேர்தல் திணைக்களம் வாக்காளர் பதிவுகளை நீக்கியதாக அறிவித்து இருந்தது.

அவ்வாறு இருக்கையில் எப்படி 5 ஆயிரத்து 807 மன்னார் மாவட்ட வாக்காளர்கள் புத்தளத்தில் வாக்களிப்பதற்கு என வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்ச்சியாக அரசியல் வாதிகளின் செயற்பாட்டிற்கு அரசாங்கமும் தேர்தல் திணைக்களமும் இணைந்து போகின்றது? என்பது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இன்றைய தினம் அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.