பாராளுமன்றத்தை சுத்தம் செய்ய வேண்டும்

343 0

பலத்திற்காக கண்ணீர் வடித்த ஆட்சியாளர்கள் யாரும் மக்களுக்காக கண்ணீர் வடிக்கவில்லை என மக்கள் தேசிய சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்களுக்காக மேடையில் கண்ணீர் வடிக்கும் சிலர் நாட்டில் சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படும் போது, பெண்கள் வெளிநாடுகளுக்கு சென்று துயரப்படும் போது கண்ணீர் வடிப்பதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

72 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள் நாட்டை அழிவுக்கு உட்படுத்தியுள்ளதாகவும் அதனால் பாராளுமன்றத்தை சுத்தம் செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.