கொழும்பில் மலையக இளைஞர்களை சந்தித்தது இ.தொ.கா

285 0

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னத்தில், நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் இ.தொ.காவின் வேட்பாளர்கள் கொழும்புவாழ் மலையக இளைஞர்களை நேற்று (30) சந்தித்து பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

கொழும்பு சினி வேர்ல்ட் மண்டபத்தில் நடைபெற்ற இப்பிரசார கூட்டத்தில்  பெருந்திரளான இளைஞர்கள் கலந்துகொண்டிருந்ததோடு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வேட்பாளர்களான ஜீவன் தொண்டமான், மருதபாண்டி ராமேஸ்வரன், பழனி சக்திவேல் ஆகியோரை ஆதரித்து பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை அழைப்பையேற்று இப்பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த இளைஞர்களுக்கு, மலையக கலாசார ஒன்றியம் நன்றி தெரிவித்துள்ளது.