குறித்த அலுவலக உத்தியோகத்தர்களிடம் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில், குறித்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த நபர் கந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் அடையாளம் காணப்பட்ட நோயாளருடன் நெருங்கிய தொடர்புடையவர் என கூறப்படுகின்றது.
இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 811 பேராக அதிகரித்துள்ளது.
அத்துடன், தெற்றுக்கு உள்ளான மேலும் 16 பேர் குணமடைந்துள்ள நிலையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2333 பேராக காணப்படுகின்றது.
467 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.