கைது செய்யப்பட்ட சுங்க அதிகாரிகள் தொடர்பில் விசாரணைக்காக இரு குழுக்கள்

266 0
ஐஸ் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட சுங்க அதிகாரிகள் தொடர்பில் இரு சுயாதீன விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுங்க ஆணையாளரினால் அதற்கான குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சுங்க திணைக்கள ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த குழு அறிக்கைகளை ஒரு வார காலத்திற்குள் தமக்கு வழங்குமாறு சுங்க ஆணையாளர் அறிவித்துள்ளார்.

அறிக்கைகள் ஊடாக குறித்த சம்பவம் தொடர்பில் சாட்சிகள் உறுதி செய்யப்பட்டால் குறித்த அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவதாகவும் சுங்க திணைக்கள ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதற்காக சுங்க ஆணையாளர் அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.