மேலும் சில இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்!

285 0

வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் சில இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அபுதாபியில் இருந்து 40 பேரும், டோஹாவில் இருந்து இருவரும், சென்னையில் இருந்து 77 பேரும் இன்று(வியாழக்கிழமை) காலை இவ்வாறு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

குறித்த அனைவரும் விமான நிலையத்தில் வைத்து பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அனைவரும் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.