சிறீலங்காவில் இனவாதச் செயற்பாடுகள் மீண்டும் தலைதூக்கியுள்ளதாக மனித உரிமை அமைப்புக்கள் கவலை வெளியிட்டுள்ளன.
இவ்வாறான இனவாதச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த சிறீலங்கா அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் அந்த அமைப்புக்கள் கேட்டுக்கொண்டுள்ளன.
இது குறித்து சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவுக்கான இயக்குனர் பிரட் அடம்ஸ் கருத்துத் தெரிவிக்கையில் அண்மைக் காலங்களாக சிறீலங்காவில் ஆபத்தான உரைகளை அவதானிக்கமுடிகின்றது.
இதனைக் கட்டுப்படுத்துவதற்கான அவசியம் அதிகாரிகளுக்கு உள்ளது.
அத்துடன், உலகின் பல பாகங்களில் பகைமைப்பேச்சு, சகிப்புத்தன்மையின்மை அதிகரித்து வருகின்றது.
எனவே, அரசாங்கங்கள் அனைத்தும் மக்கள் மனிதஉரிமைகளை அனுபவிப்பதற்கு உள்ள உரிமை குறித்து தங்களது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.