நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து செல்கின்றது என ஐக்கியதேசிய கட்சி கவலை வெளியிட்டுள்ளது.
ஐக்கியதேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ருவான் விஜயவர்த்தன இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.
தவறிழைப்பவர்களை காப்பாற்றக்கூடிய வகையில் அரசாங்கம் சட்டங்களில் மாற்றங்களை கொண்டுவரமுயல்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
சட்டத்தின் ஆட்சியை முற்றாக புறக்கணிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாக மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர் ஒருவர் தேர்தல் சட்டங்களை மீறி போக்குவரத்து விதிமுறைகளை மீறி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் என ருவான் விஜயவர்த்தன தெரிவி;த்துள்ளார்.
குருநாகலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடத்தை தரைமட்டமாக்கிய நபர் தண்டிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.