வெளிப்படையான அபிவிருத்தி வேலைத்திட்டமொன்றை செயற்படுத்த தான் தயாராக உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அகுணுகொலபெலெஸ்ஸவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
தேர்தலின் வெற்றிப் பெற்று பிரதமராக செயற்படும் போது நாட்டின் அனைத்து பிரதேசத்திற்கும் அபிவிருத்தி வேலைத்திட்டமொன்றை செயற்படுத்தி அவற்றை ஆய்வு செய்வதாக தெரிவித்தார்.
30 வருட அனுபவத்துடன் நல்லது கெட்டது என்னவென்று எமக்கு நன்கு புரிந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.