சிறிலங்காவில் இன்றுடன் வாக்காளர் அட்டைகள் விநியோகம் நிறைவு

268 0

சிறிலங்காவில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகம் இன்றுடன் (புதன்கிழமை) நிறைவடைவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வாக்காளர் அட்டைகள் விநியோகப் பணிகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரட்ன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, “எதிர்வரும் ஒகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கையானது இன்றுடன் நிறைவடைகின்றது.

மேலும் இதுவரையான காலப்பகுதியில் 97 சதவீத வாக்காளர் அட்டைகள் குடியிருப்புகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

எனவே வாக்காளர் அட்டைகளைப் பெறாதவர்கள் பிரதேசத்திலுள்ள தபால் அலுவலகத்திற்குச் சென்று தமது அடையாளத்தை உறுதிப்படுத்தி அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.