பாதாள உலக கும்பல் மீதான நடவடிக்கை தேர்தலை இலக்காக கொண்டதல்ல – விமல்

234 0

பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு பாதாள உலக கும்பல் உறுப்பினர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தற்காரர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

எம்பிலிப்பிட்டிய பகுதியில் இடமபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நோக்கம் நாட்டை போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து விடுவிப்பதாகும் எனக் கூறினார்.

மேலும் குற்றச் செயல்கள் மற்றும் போதைப் பொருள் மோசடிகள் இல்லாத ஒரு நாட்டை உறுதி செய்தே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முக்கிய குறிக்கோள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு இதுபோன்ற தீங்கு விளைவிக்கும் விடயங்களிலிருந்து இளைஞர்களைக் காப்பாற்ற ஜனாதிபதி விரும்புகிறார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் நடந்தாலும் நடக்காவிட்டாலும் இதுபோன்ற முயற்சிகள் தொடரும் என்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழித்த நாடாக இலங்கை இருக்கும் என்றும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.