சிறிலங்காவில் கொரோனா தொற்று காரணமாக வேலையிழந்தவர்கள் குறித்து கணக்கெடுப்பு

300 0

சிறிலங்காவில் கொரோனா தொற்று காரணமாக வேலையிழந்தவர்கள் குறித்து கணக்கெடுப்பு நடாத்தப்படவுள்ளது.

தொகை மதிப்பு மற்றும் புள்ளி விரபத் திணைக்களம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது.

உற்பத்தி, வருமானம் மற்றும் கிருமிநாசினிகளுக்கான செலவுகள் மற்றும் பிற தொடர்புடைய செலவுகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பிற டாக்ஸி சேவைகளின் ஓட்டுநர்கள் குறித்து இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளது.

கணக்கெடுப்பை ஒகஸ்ட் மாதம் 15ஆம் திகதிக்குள் நடத்தி முடிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன், செப்டெம்பர் மாதத்திற்குள் அது பகிரங்கப்படுத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2020ஆம் ஆண்டிற்கான வேலையின்மை குறித்து திணைக்களம் வெளியிட்டுள்ள ஆண்டு அறிக்கையிலேயே, இலங்கையில் தற்போது சுமார் நான்கு இலட்சத்து 80 ஆயிரம் பேர் வேலையில்லாமல் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.