இராணுவ மயமாகும் தமிழர் பகுதி

325 0

அண்மையில் (ஜூலை 25) யாழ் சித்தங்கேணிப்பகுதியில் ´நல்லிணக்க மையம்´ ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நலன் விரும்பிகள் மற்றும் வயோதிபர்களின் ஒத்துழைப்புடன் யாழ் பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதி, மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரியவினால் குறித்த நல்லிணக்க மையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இங்கு வசிக்கும் இளைஞர்களின் ஆற்றல்கள் மற்றும் திறமைகளை வெளிப்படுத்தி சிவில் மற்றும் இராணுவ உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன் குறித்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

பெயர் குறிப்பிட விரும்பாத நன்கொடையாளர் ஒருவரினால் குறித்த நிலையத்தின் புனர்நிர்மாண பணிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.

இதன் பராமரிப்பு பணிகளை யாழ் இராணுவத்தினர் மேற்கொள்வர் என தெரிவிக்கப் படுகின்றது. மேலும் சிவில் சமூகத்தின் விளையாட்டு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் உள்நாட்டு வியாபார நடவடிக்கைகளை மேம்படுத்த நேரடியாக ஒத்துழைப்பு வழங்கும் நோக்கத்துடன் இந்த மையம் நிறுவப்பட்டுள்ளது.