32 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்

233 0

கொரோனா தொற்றால் இலங்கைக்கு வரமுடியாமல் கட்டாரில் தங்கியிருந்த 29 இலங்கையர்கள் இன்று (29) அதிகாலை நாட்டை வந்தடைந்தனர்.

மேலும் இங்கிலாந்தில் சிக்கியிருந்த 3 இலங்கையர்கள் நேற்று (28) இரவு 11.55 மணியளவில் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

நாட்டை வந்தடைந்த குறித்த 32 பேருக்கும் விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.