இராஜாங்கனை பகுதியில் இன்று (29) தபால் மூல வாக்களிப்பு இடம்பெறுகின்றது.
இதன்போது, 420 அரச அதிகாரிகள் தபால் மூலம் வாக்களிக்கவுள்ளதாக அநுராதபுரம் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட இராஜாங்கனை உள்ளிட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவரை 98 சதவீதமான வாக்காளர் அட்டைகள் வீடுகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன குறிப்பிட்டுள்ளார்.