ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்தவருக்கு கொரோனா

231 0

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகை தந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நாட்டில்   கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,810 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை 2296 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலையில் 503 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.