பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று முதல் கடமைக்கு சமூகமளிப்பதற்கு தீர்மானித்துள்ளதாகச் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
இன்று மதியம் முதல் தங்கள் பணிகளை மீண்டும் ஆரம்பிக்கத் தயாராக உள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 16 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை 11 நாட்கள் நாடளாவிய ரீதியில் பொது சுகாதார பரிசோதகர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
அதன்படி, இன்று முதல் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்க அதிகாரிகள் தங்களது கடமைகளுக்குத் திரும்புவார் கள் எனவும் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப் படுத்தும் நடவடிக்கையில் கடுமையாக தங்களின் பங்களிப்பை மேற்கொள்வார்கள் என சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய சுட்டிக்காட்டினார்.
எந்தவொரு தொழிற்சங்கத்தாலும் அல்லது நிறுவனத்தாலும் தங்கள் பணிகளுக்குப் பங்கம் விளைவிக்காது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தங்களின் நடவடிக்கைகளைத் ஆரம்பிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் பிரச்சார நடவடிக்கையின் போது, கொரோனா வைரஸ் பரவுதலைச் சரியான முறையில் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆராயப்படும் என சங்கத்தின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.